தண்ணீர் கேன் விற்பனை நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

செஞ்சி: செஞ்சி பகுதியில் கேன்களில் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாமலும், உணவு பாதுகாப்புத்துறை லைசன்ஸ் பெறாமலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாமல் 20 லிட்டர் கேன்களில் தண் ணீரை அடைத்து சீல் வைத்து விற்பனை செய்கின்றனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார்கள் வந்தது. இதன் தொடர்ச்சியாக செஞ்சி பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் நிறுவனங்களில் மாவட்டஉணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மகேஸ்வரி தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். இதில் சிட்டாம்பூண்டியில் உள்ள நிறுவனத்தில் தண்ணீரை ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாமல் கேன்களில் அடைத்து சீல் வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.இது குறித்து அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.தொடர்ந்து ஐ.எஸ்.ஐ., தரச்சான்று, உணவு பாதுகாப்பு துறை லைசன்ஸ் இல்லாமல் கேன்களில் சீல் வைத்து தண்ணீரை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.