சுப்புலாபுரத்தில் 40 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

திருநெல்வேலி,:

சுப்புலாபுரம் சுற்றுப்பகுதிகளில் உ ணவு பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணெய் வியாபாரிக ளிடம் ஆய்வு செய்தபோது 40 லிட்டர் கலப்பட சமையல் எண் ணெயை பறிமுதல் செய்தனர்.

கரிவலம் வந்தநல்லுாரை அடுத்த சுப்புலாபுரம் கிராமத் தில் கலப்பட எண்ணெய் உதிரியாக விற்பனை செய்யப் படுவதாக தமிழக உணவுத் துறை மற்றும் நிர்வாகத் துறை ஆணையர் அமுதா விற்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார், உணவு ஆய்விற்காக உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்ட குழுவை அமைத்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகுமாரசாமி, சண்முகசுந்தரம், கருப்பசாமி ஆகியோர் கொண்ட குழு சுப்புலாபுரம் கிராமத்தில்  கலப்பட் எண்ணெய்  விற்பனை செய்யப்படுகிறதா என அறிய எண்ணெய் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களது இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வீடுக ளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்களில் இருந்த சுமார் 40  லிட்டர் கடலை எண் ணெய், பாமாயில் போன்றவற்றை பறிமுதல் செய்து கரிவலம்வந்த நல்லுார் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று  சீல் வைத்தனர்.  இதுதவிர அதிகாரிகள், எண்ணெய் வியாபாரிகளின் இருசக்கர வாகனங்களில் விற்பனைக்கு வைத்திருந்த பாமாயில் கடலை எண்ணெயை உணவு மாதிரி எடுக்கப் பட்டு அரசால் வரையறுக்கப்பட்ட உணவு பகுப்பாய் விற்காக அனுப்பினர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், ‘ பொதுமக்கள் உதிரியாக விற்கப்படும் எண்ணெயை வாங்க கூடாது. பாக்கெட் எண்ணெய் வாங்கும் போது விளக்கெரிக்க பயன்படுத்த மற்றும் பூஜா எண்ணெய் அல்லது வெளி உபயோகத்திற்கு மட்டும் என சிறிய அளவில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் இருந்தால், அந்த எண்ணெய் பாக்கெட்டுகள் தரம் குறைந்தவை மற்றும் பாதுகாப்பற்றவை என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் மேற்கண்ட எண்ணெய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் ’என்றார்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.