ரூ.3 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஆர்.எஸ் லாஜிஸ்டிக் நிறுவனத்தில் போலீசார் துணையுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அம்பலால் என்பவருக்கு வந்திருந்த 15 பெட்டிகளை சோதனை செய்தபோது, அதில் குட்கா, பான்மசலா போன்றவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.