தரமற்ற உணவுப் பொருள்கள் விற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்’

பெரம்பலூர் மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் உணவு பொருள்களின் தரம், விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்குள் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், இ-சேவை மையங்கள் மூலம் பதிவுச்சான்று பெறலாம். 
தரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This entry was posted in News & Events. Bookmark the permalink.