மன்னார்குடியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

மன்னார்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அண்மையில் நடத்திய சோதனையில், காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கோ. செல்வராஜ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மளிகைக் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், ரூ. 5,800 மதிப்பிலான காலாவதியான பிஸ்கட்கள், ரூ.12,200 மதிப்பிலான காலாவதியான மளிகைப் பொருள்கள், ரூ. 6,700 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
இந்த ஆய்வில்,  உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் க. மணாழகன் (மன்னார்குடி), என்.ரெங்கராஜ் (கூத்தாநல்லூர்), எஸ். செல்வகுமார் (முத்துப்பேட்டை), சுகாதார ஆய்வாளர் சு. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.