உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை சிறப்பு முகாம்: 549 பேர் விண்ணப்பம்

ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை சார்பில் உரிமம் பெறுவதற்காக அண்மையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 549 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உணவுத் தொழில் உற்பத்தி செய்பவர்கள், உணவு வணிகர்கள், உணவு தொழில் செய்து வருபவர்கள் அனைவரும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (2006) உரிமம், பதிவுச் சான்று பெற்ற பிறகே வணிகம் செய்ய வேண்டும். அவ்வாறு உரிமம், பதிவுச் சான்று
பெறாதவர்கள், உணவுத் தொழில் புதியதாக தொடங்க இருப்பவர்கள் உரிமம், பதிவுச் சான்று பெறும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, நியமன அலுவலர் டாக்டர் த.கலைவாணி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், சுமார் 700 வணிகர்கள் கலந்துகொண்டனர். அதில், 549 பேர் உரிமம், பதிவுச் சான்றுக்காக விண்ணப்பித்தனர். இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், மாநகர வணிகர் சங்க நிர்வாகிகள், உணவகத் தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

This entry was posted in News & Events. Bookmark the permalink.