வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

ஏரல், நவ. 2: முக்காணி ஜெயராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் முனியராஜ்(32). இவரது மனைவி சந்தனமாரி(27). இவர் நேற்று முன்தினம் காலை உடல் பரிசோதனைக்காக ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செல்வதற்காக முக்காணியில் இருந்து தனது மகள் ராஜலெட்சுமியுடன்(1) ஏரல் பஸ்சில் வந்துள்ளார். ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் மகள் ராஜலெட்சுமிக்கு உளுந்த வடை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அந்த வடையில் ஒரு பல்லி இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வடையில் பல்லி இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் டைட்டஸ், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  மேலும் வடை வாங்கியதாக கூறப்படும் பஸ் நிலையம் அருகில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்த ரூ.490 மதிப்புள்ள வடைகளை கைப்பற்றி அழித்தனர். மேலும் கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், உணவு பண்டங்களை பாதுகாப்பாகவும் வைக்க அறிவுரை வழங்கினர். அதுவரை தற்காலிகமாக அந்த கடையை மூட உத்தரவிட்டு சென்றனர். இதையடுத்து அந்த கடை உரிமையாளர் கடையை சுத்தம் செய்து, கடைக்கு பெயின்ட் செய்து வருகிறார்.

Posted in News & Events | Comments Off on வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

போதை பொருட்கள் பறிமுதல்

https://4.bp.blogspot.com/-3KGJTe6UqRQ/WffR7fDtMrI/AAAAAAAAzO4/hNcoJhJ08j0xKxlE3WnfdVrNCoGTL-oewCEwYBhgL/s1600/20171031f_017105005.jpg

Posted in News & Events | Comments Off on போதை பொருட்கள் பறிமுதல்

எலி கரப்பான் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

https://4.bp.blogspot.com/-vKhNBYxN8Hw/WfXMDC4IvtI/AAAAAAAAzNU/QkpoOnbnCDkU8nNWtuPqEV9KH6FKIWXuACEwYBhgL/s1600/20171029c_013104002.jpg

Posted in News & Events | Comments Off on எலி கரப்பான் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைப்பு

 

விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

விளாத்திகுளம் அருகே வெம்பூரில் எண்ணெய் குடோன் உள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் (வயது 42) என்பவர் எண்ணெய் குடோனை நடத்தி வந்தார். இங்கு முறைகேடாக டின்களில் தரம் குறைந்த எண்ணெயை கலந்து விற்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்லப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவபாலன் உள்ளிட்ட குழுவினர் நேற்று வெம்பூரில் உள்ள எண்ணெய் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

சீல் வைப்பு

அப்போது அந்த குடோனில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றில் தரம் குறைந்த எண்ணெயை கலப்படம் செய்து டின்களில் அடைத்து, கடைகளுக்கு விற்றது தெரிய வந்தது. அந்த எண்ணெய் குடோனில் தலா 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 டின்கள் இருந்தன.

அவற்றில் இருந்து எண்ணெய் மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து, தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த எண்ணெய் குடோனை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆய்வக பரிசோதனையின் முடிவில் எண்ணெய் குடோனின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in News & Events | Comments Off on விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைப்பு

உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

Posted in News & Events | Comments Off on உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

HAPPY DIWALI

diwalidiwalicardef68e9e5bc279b0ccf4f2e61c1f1f947

Posted in News & Events | Comments Off on HAPPY DIWALI

தரமற்ற உணவுப் பொருள்கள் விற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்’

பெரம்பலூர் மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் உணவு பொருள்களின் தரம், விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்குள் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், இ-சேவை மையங்கள் மூலம் பதிவுச்சான்று பெறலாம். 
தரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in News & Events | Comments Off on தரமற்ற உணவுப் பொருள்கள் விற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்’

விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு

Posted in News & Events | Comments Off on விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மந்தோப்பு சாலையில் டெங்க விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை, நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஸ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வணிகர்கள் பொது மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும், தங்கள் நிறுவனங்களில் தண்ணீர் தேங்காதவறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரைத்தினார்.நிகழ்ச்சியல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகேசன், மாரிச்சாமி,பொன்ராஜ் கலந்து கொண்டனர்.

Posted in News & Events | Comments Off on கோவில்பட்டியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

குளச்சலில் காலாவதியான உணவு பொருட்கள் ஆய்வு

Posted in News & Events | Comments Off on குளச்சலில் காலாவதியான உணவு பொருட்கள் ஆய்வு